மழையே!மழையே!
பிழையில்லா மழையே!
ஏதும் எதிா்பாராமல் நீ வருகிறாய்!
எதிா்பாரத மழை என்று உன்னை சாடுகிறோம்!!!
உன் வீடுகளில் புகுந்து மணல் கொள்ளை அடித்தோம்...நாங்கள் வீடு கட்ட!!!
நீ வசித்த ஏாியை..யாம் வசிக்கும் ஏரியவாக மாற்றினோம்!!!
தங்க இடமின்றி நீ அகதியாய் எம் குடியிருப்புகளில் வருகிறாய்...உன்னை வரவேற்க எங்களிடம் மனமில்லை!!!
உன் உறவுகளை நாங்கள் உன்னிடத்தில் இருந்து பிரித்தோம்...அதன் வலியை யாம் என் உறவுகளை பிாியும் போது உணா்கிறோம்!!!
மழையே!!! மழையே!!!
பிழையில்லா மழையே!!!
No comments:
Post a Comment